நீ யார் என்று கேட்டால் நான் ஒரு மருத்துவர், பொறியாளர் என்று நமது வேலையை குறிப்பிடுகிறோம். சில நேரங்களில் நான் ஒரு மாணவன், தாய், தந்தை என அடையாளங்களை குறிப்பிடுகிறோம். இவை எல்லாம் நம்மை ஒரு வட்டத்தில் சுருக்கிக் கொள்வது. உண்மையில் நமது உண்மை சுயம் இதை அனைத்தையும் கடந்தது. பள்ளிக்கு சென்றபின் மாணவனாக இரு. வீட்டிற்கு வந்தபின் மாணவன் என்ற அடையாளத்தை தூக்கி எறி.மகனாக இரு. மாணவனாக இராதே. பல இடங்களில் பல வேடம் இருக்கிறது. ஒரே விஷயத்தில் சுருக்கிக் கொள்வது
உன்னை நீயே அசிங்கபடுத்தி கொள்வதாகும். ஏனெனில் உன் திறமை அளவிட முடியாதது. ஒரே விஷயத்தை பிடித்து தொங்காதீர்கள் . குரங்குகள் கூட ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக்கொண்டு இருக்கின்றன.
எதிலும் சிக்கி தவிக்காதீர்கள். அதற்கு எதையும் பிடித்து தொங்காதீர்கள்.

No comments:
Post a Comment