கோபத்தை கட்டுபடுத்த முயன்றால் பல மடங்கு அதிகரிக்கும். நீ கேட்கலாம். நான் பிறர் மீது கோபப்படும்போது அதை கட்டுபடுத்தி விடுகிறேனே, இப்போது கோபம் இல்லையே என்று. யார் சொன்னது? உள்ளே உற்று பார். அனலாக கொதித்துகொண்டிருக்கும் கோபத்தை பார். கட்டுபடுத்தும்போது அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. மறைவதில்லை. அதை தொந்தரவு செய்யாதே. அங்கேயே வைத்து கவனி. அதுவும் தேவைப்படும். ஆனால் எந்த நிலையிலும் கோபத்தால் உன் இயல்பான அமைதி ஆடிவிடக்கூடாது. அப்போது கோபம் இருக்கும். ஆனால் அதனால் எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது.
Author Details
LS AND E(Lifestyle and education).
No comments:
Post a Comment