விழிப்புணர்வுதான், ஒருவர் தனக்குள் மையத்தில் இருப்பதற்கான செயல்நுணுக்கம்; உள் நெருப்பை அடைவதற்கான செயல் நுணுக்கம். அது, உள்ளேதான் மறைந்து உள்ளது.. அதை கண்டுகொள்ள முடியும். மேலும், அந்த மையத்தை, அந்த நெருப்பை நாம் கண்டு கொண்டால் மட்டுமே, நாம் கோவிலுக்குள் நுழைகின்ற தகுதி பெற்றவராக ஆவோம். – அதற்கு முன்பு அது ஒருபோதும் கிடையாது.
ஆனால், நாம் அடையாளக் குறியீடுகளின் மூலம் நம்மை ஏமாற்றிக் கொள்ள முடியும். அடையாளக் குறியீடுகள் நமக்கு ஆழ்ந்த உண்மைகளை காட்டுவதற்காக உள்ளன. ஆனால் நாம் அதை ஏமாற்று வித்தைகளாகப் பயன்படுத்த முடியும். நாம் ஊதுபத்தி கொளுத்தி வைக்கலாம். நாம் வெளியில் உள்ள பொருட்களை வணங்கலாம். அதன்பிறகு, நாம் ஏதோ செய்துவிட்டோம் என்று நீங்கள் உங்களை சமாதானம் செய்து கொள்ளலாம். நாம் சமயநெறி இல்லாதவர்களாக இருந்து கொண்டே, சமயநெறி உள்ளவர்களாக உணர்ந்து கொண்டு போகலாம். இதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூமி இப்படித்தான் ஆகிவிட்டது. தங்களுக்குள் உள்ள அந்த அக நெருப்பை கண்டு கொள்ளாமலேயே, மக்கள் தாங்கள் வெறுமனே வெளி அடையாள குறியீடுகளை பின்பற்றுவதன் மூலம், தாங்கள் மிகவும் சமயநெறி மிக்கவர்களாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் தோல்வி அடைந்தாலும்கூட, முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருக்கையில், நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வி அடைவீர்கள்; ஆனால் உங்களது தோல்வியும்கூட உங்களுக்கு உதவ முடியும். உங்களால் ஒரு சிறு நொடிகூட விழிப்புணர்வோடு இருக்க முடியாமல் தோற்றுப் போவதுகூட நீங்கள் எந்த அளவிற்குத் தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்த முடியும்.
நீங்கள் தெருவில் நடந்து செல்லுங்கள். அப்போது, தன்னுணர்வோடு உங்களால் ஒருசில அடிகள் கூட நடந்து செல்ல முடியாது. மீண்டும் மீண்டும் நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். ஒரு விளம்பரப் பலகையை படிக்கும்போது, நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். யாராவது ஒருவர் உங்களைக் கடந்து செல்வார்., நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள். அதன்பிறகு நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள்.
உங்களது தோல்விகள், உங்களுக்கு உதவுபவை. நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு அவைகள் காட்ட முடியும். மேலும், நீங்கள் தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்கின்ற அந்த ஒரு சிறு விழிப்புணர்வு பெற்றாலே போதும். அப்போது நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை சம்பாதித்ததாகிவிடும். ஒரு பைத்தியக்காரன், தான் ஒரு பைத்தியம் என்கிற விழிப்புணர்விற்கு வந்துவிட்டால், அவன் புத்தி சுவாதீனத்தின் பாதையில் செல்வதாகிவிடும்.

No comments:
Post a Comment