பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் - LifeStyle Today

Breaking

Friday 28 March 2014

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் மலை உச்சி கோயிலுக்கு பூசாரி தேவை, நாளை காலை முதல் ஜாமத்துக்குள் யார் இங்கே வந்து பூஜை தொடர்பான தேர்வில் தேர்ச்சி பெறுகிறாரோ அவர் பூசாரியாக நியமிக்கப்படுவார் என நிர்வாகம் அறிவித்தது.
மிகுந்த வருமானம் கிடைக்கும் என பூசாரிகள் பலர் முதல்நாள் இரவே புறப்பட்டு அந்த மலையின் முள்ளும் கல்லும் நிறைந்த ஒற்றையடிப்பாதையில் முதல் ஜாமத்திற்கு முன்பே வந்தனர்.

அதிக அளவில் பூசாரிகள் வந்ததால் தேர்வு முடிய நண்பகல் ஆகிவிட்டது,

அப்பொழுது ஒரு இளைய பூசாரி வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தார் அவரது உடையில் ஏராளமான அழுக்கு உடலில் சிராய்புகள்.

நிர்வாகம்;- தம்பி, முதல் ஜாமத்திற்குள் வரவேண்டும் என அறிவித்தும் வெகு தாமதமாக வந்திருக்கிறாயே,

இளம் பூசாரி:-மலையடிவாரத்தை நேற்றே வந்தடைந்துவிட்டேன் ஆனால் வரும் வழியில் ஏராளமான முட்களும் கற்களூம் இருந்தன இந்த மோசமான பாதையில் பக்தர்கள் வர சிரமம் ஏற்படுமே என என்னால் இயன்ற வரை பாதையை சுத்தபடுத்திவிட்டு வர தாமதமாகிவிட்டது.

தர்மகர்தா:-உனக்கு பூஜை செய்ய தெரியுமா?

இளம்பூசாரி;-கடவுளை நீராட்டி பூக்கள் சமர்பித்து நைவேத்தியம் வைத்து தீபாரதனை செய்திருக்கிறேன்

தர்மகர்த்தா:-மந்திரங்கள்?

இளம்பூசாரி;-இப்பொழுதுதான் கற்றுகொள்ள ஆரம்பித்திருக்கிறேன்,

தர்மகர்த்தா:- நீ தான் இக்கோயில் பூசாரி நானே உனக்கு பூஜை முறைகள் சொல்லிதருகிறேன்.

வந்திருந்த மற்ற பூசாரிகள் கடுமையாக எதிர்தனர் மந்திரம் தெரியாமல் பூசாரியாவதா என,

தர்மகர்த்தா;-இம்மந்திரங்களை உங்களை விட சிறப்பாக ஒலிநாடாக்கள் சொல்லும் அதனால் அதை பூசாரியா நியமிக்கமுடியுமா?

யார் உண்மையும் பொது நலத்தையும் பேண முயல்கிறார்களோ அவர்கள் தான் இறைவனுக்கு நெருக்கமாக இருக்கமுடியும் உங்கள் அத்தனை பேரில் இக்கோயில் இறைவனை பூஜை செய்யும் தகுதி உள்ள ஒரே நபர் அந்த இளம் பூசாரி மட்டும் நீங்கள் கிளம்பலாம்.

நன்றி-இந்துஸ்தான் மூர்த்தி[பசுத்தாய்]

No comments:

Post a Comment