ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்திருக்கும்போது உன்னை சுற்றி அலைந்து கொண்டிருக்கும் எண்ணங்களை பார். அதனுடன் ஒன்றி விடாதே. பைத்தியமாகி விடுவாய். பைத்தியம் என்றாலே ஏதாவது ஒரு எண்ணத்துடன் ஒன்றி விடுவதுதான். எந்தவித எண்ணத்தையும் அடையாளப்படுத்தி கொள்ளாமல் கவனித்து கொண்டேயிரு. மீண்டும் அடையாள படுத்தி கொள்வாய். மீண்டும் மீண்டும் கவனி. இதை உன் வழக்கமாக்கி கொள். நீ எங்கே இருந்தாலும் கவனித்து கொண்டே இரு. ஆனால் இயல்பாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் அமர்ந்து தியானத்தை பழக சொல்கிறார்கள். அப்போதுதான் இயல்பாக கவனிக்கும் நுட்பத்தை அறிய முடியும். ஆனால் ஞாபகத்தில் வைத்து கொள். அமர்ந்து தியானம் செய்தல் மட்டுமே போதாது. அதை உன் வாழ்க்கை முறையில் கொண்டு வந்தபின்னர் நீயே இயல்பாகி விடுவாய். அங்குதான் தியானமே தொடங்குகிறது.
Author Details
LS AND E(Lifestyle and education).
No comments:
Post a Comment