இதுவே அனைத்து தியான யுக்திக்கும் ஆணிவேர். ஆனால் இது சொல்லும்போது எளிதாக தோன்றினாலும் செயல்முறையில் கடினமானது. சாட்சியாய் இரு என்று சொல்லும்போது உனது உடலையும் உன்னையும் பிரிக்கிறாய். அப்படி செய்யாதே. அது மேலும் பதட்டத்தை அதிகரிக்கும். இதை ஓஷோவும், அவருடைய பல சந்நியாசிகளும், இப்போது நானும் 3 வருடங்களாக பயிற்சி செய்தேன். பதட்டம் மட்டுமே பரிசாக கிடைத்தது. ஏனெனில் அங்கே முயற்சியும் பிரிவும் இருக்கிறது. இதை நீ பயிற்சி செய்யாதே. உனக்கும் இதே நிலைமைதான் நடக்கும்.
ஆனால் உண்மையான சாட்சிபாவம், நீ ஆழ்ந்து அனுபவித்து கொண்டு அதே சமயம் விழிப்புணர்வோடு இருக்கும்போது நடைபெறும். அனுபவத்தை மறந்துவிட்டு ஆழமாக அனுபவி. சாட்சியாய் இருத்தல் தன்னால் நிகழும்
ஆனால் உண்மையான சாட்சிபாவம், நீ ஆழ்ந்து அனுபவித்து கொண்டு அதே சமயம் விழிப்புணர்வோடு இருக்கும்போது நடைபெறும். அனுபவத்தை மறந்துவிட்டு ஆழமாக அனுபவி. சாட்சியாய் இருத்தல் தன்னால் நிகழும்
No comments:
Post a Comment