சமூக சேவகனுக்கு ஒரு ஆசிரியரின் பதில் - LifeStyle Today

Breaking

Tuesday, 25 March 2014

சமூக சேவகனுக்கு ஒரு ஆசிரியரின் பதில்

ஒரு கல்லூரி மாணவன் சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்டவன். அவனுக்கு ஒரு விதவை பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். திருமணம் செய்து கொள்ள ஒரு விதவை பெண்ணும் கிடைத்தாள். அவன் திருமணத்திற்கு தன் ஆசிரியருக்கு அழைப்பிதழ் வழங்க சென்றான்.
மாணவன்: ஐயா நான் ஒரு சமூக சேவகன். நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொள்ள போகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஆசிரியர்: சரிதான். ஆனால் நீ திருமணம் செய்து கொண்டபின் அவள் விதவை கிடையாது. நீ ஒரு சமூக சேவகன்.
நீ அவள் விதவையாய் இருப்பதையே விரும்புவாய். எதற்கும் நன்கு யோசித்து முடிவு செய்.

(மாணவன் எதுவும் பேசாமல் சென்றான். அந்த விதவை பெண்ணை திருமணமும் செய்து கொண்டான். சில மாதங்கள் கழித்து அந்த ஆசிரியரை தேடி வந்தான் அந்த மாணவன்)

மாணவன்: ஐயா நீங்கள் சொன்னதுதான் சரி. நான் அவள் விதவையாக இருப்பதையே விரும்பினேன். இப்போது அவள் கல்யாணம் ஆனவள். என்ன செய்வது?

ஆசிரியர்: அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. நீ போய் தற்கொலை செய்து கொள். அவள் விதவையாகி விடுவாள்

(அதன்பின் அந்த மாணவன் அந்த ஆசிரியரின் கண்ணிலே படவே இல்லை)

அந்த ஆசிரியர் வேறு யாருமல்ல. ஓஷோதான்.

சமூக சேவகனாக இருக்க முயற்சி செய்யாதே. அது மேலும் உன்னை தொந்தரவுக்கு உள்ளாக்கும்

No comments:

Post a Comment